ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா சென்றுள்ளார்.
உத்தியோகபூர்வமற்ற அழைப்பின் பேரில் அவர் இரண்டு நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ராமர் கோவிலில் அவருக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர் இந்தியாவின் புது தில்லியில் தங்கியிருக்கும் போது, அவர் தனிப்பட்ட அளவில் பல்வேறு நபர்களைச் சந்திக்கப் போகிறார்.
அவர் இன்று (10) நாடு திரும்புவதாக இருந்தது.