இலங்கையின் சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை கலைக்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த குழு ஜனவரி 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டின் ஊக்குவிப்பு, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக, பதிவு செய்யப்பட்ட விளையாட்டு தொடர்பான சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளை ஒருங்கிணைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி அப்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரொஷான் ரணசிங்கவினால் குழு நியமிக்கப்பட்டது.