அருட்தந்தை சிறில் காமினி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றும் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி நேற்று, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அத்துடன், அங்கு சுமார் 7 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர், அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் அவர் இன்று (16) முற்பகல் 9.30 அளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.