சுகாதார ஆலோசனைகளை மீறி ஆர்பாட்டங்களை நடத்துவதால் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் ஒன்றுக்கூடும் சந்தர்ப்பங்களில் நாம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றினாலும் அங்கு தொற்றாளர் ஒருவர் இருப்பின் ஏனையவர்களுக்கும் தொற்றுப்பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். இதன் காரணமாகவே ஒன்றுக்கூடல்களை தவிர்க்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அனைவரும் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் தொற்றுப்பரவுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகளை நடாத்துவதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுப்பதாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட மேலும் சில அரசியல் கட்சிகள் நாளைய தினம் கொழும்பில் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். தற்போது கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. சுகாதார பிரிவினர் என்ற அடிப்படையில் கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளையே நாம் மேற்கொள்வதற்கு கவனம் செலுத்துவோம் என தெரிவித்துள்ளனர்.