பிரதான ரயில்வே பாதையின் விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையின் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக தாழிறக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் இன்று குறித்த பாதையினூடாக வழமை போன்று ரயில் சேவைகள் இயங்காது. மேலும் 10 ரயில்கள் மாத்திரமே இயங்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி பாதை தடையிலிருந்து கொழும்பு, கோட்டைக்கு மூன்று ரயில்களும், வியாங்கொடையிலிருந்து மூன்று ரயில்களும், கம்பஹாவிலிருந்து ஒரு ரயிலும், ராகமையிலிருந்து இரண்டு ரயில்களும் இயங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் குறித்த ரயில் பாதையை சீர் செய்ய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.