வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார்.
நியூசிலாந்தில் பசுமைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மனித உரிமை வழக்கறிஞர், கோல்ரிஸ் கஹ்ராமன் (Golriz Ghahraman) ஆடைகளை திருடிய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
43 வயதான அவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடுகிறார். ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகளுக்காக வாதிட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.