கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகத்தை 28 மணித்தியாலங்களுக்கு இடை நிறுத்தவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை மேற்படி நீர்விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 04, 05, 06, 07, 08 மற்றும் கோட்டை, கடுவல ஆகிய மாநகர சபை பகுதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலேயிலிருந்து கோட்டை வரையான நீர் குழாயில் மேற்கொள்ளப்பட்டவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனால் முன்கூட்டியே தேவையான அளவு நீரை சேமித்துக்கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.