மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ மாதிவெல வீட்டுத்தொகுதியில் பாதி பேர் எம்.பி.க்கள் அல்ல என்றும் வெளியாட்கள் என்றும் சமீபத்திய விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் எம்.பி.க்கள் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்த குடியிருப்புகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் மாதிவெலயில் பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் வழங்கப்படுவதுடன் இந்த வீடுகளை பராமரிப்பதற்கு அரசாங்கம் வருடாந்தம் பல கோடி ரூபாவை செலவிடுகின்றது.
அந்த வீடுகளை வெளியாட்களுக்கு கொடுக்க வேண்டாம் என பலமுறை எம்பிக்களுக்கு அறிவித்தல் கொடுத்தாலும் பலனில்லை என்றும் பழையபடியே நடைபெறுவதாகவும் தெரியவருகிறது.
எம்.பி.க்களின் சம்மதத்துடன் இருப்பதால் இவ்வாறு வெளியாட்களை நீக்குவது சிக்கலாக மாறியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையில், எம்.பி.களின் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியை நடத்துவதற்கான செலவும் இரட்டிப்பாகியுள்ளதாக தெரியவருகிறது.