follow the truth

follow the truth

November, 29, 2024
HomeTOP19வது நிறைவேற்று ஜனாதிபதி அநுரவின் முதலாவது உத்தரவு இதுதானாம்..

9வது நிறைவேற்று ஜனாதிபதி அநுரவின் முதலாவது உத்தரவு இதுதானாம்..

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக ஜனாதிபதியாக வரவுள்ள அநுர குமார திஸாநாயக்கவின் முதலாவது அறிவிப்பானது பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைப்பதே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. திரு.லால் காந்த குறிப்பிடுகிறார்.

கண்டி கரலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

“.. இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ‘திசைகாட்டி’ வெற்றி பெரும் என்பதை அனைத்து சர்வே அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன. ‘திசைகாட்டி’ வெற்றி பெறும் என்ற அச்சத்தில் உள்ளூராட்சித் தேர்தலை இந்த அரசாங்கம் ஒத்திவைத்தது.

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெறுவார் என்பதில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் உள்ளது. ஓரளவுக்கு வாக்குப்பதிவு இருக்காது என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது. ஆனால், தேர்தலுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதே ரணிலின் வேலை.

இந்த நாட்டை வைத்து 75 ஆண்டுகளாக மாறி மாறி சாப்பிட்டது. உருவாக்கப்படவில்லை. உலகத்தின் முன் இது ஒரு திவாலான நாடு என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்கு முன்னர் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், திசைகாட்டியினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். அடுத்த ஏழு மாதங்களுக்கு இடைவெளி இல்லை. ஒவ்வொருவரும் தினமும் உழைக்க வேண்டும்.

நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் முதல் அறிவிப்பு. எனவே, பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் – அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்

அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரை...

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ரூ.1 பில்லியன் இழப்பீடு கோருகிறார் மனுஷ

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட...

ஜனாதிபதி அநுரவின் கீழ் 94 நிறுவனங்கள் உள்ளன – ஹரிணிக்கு 26, நலிந்தவுக்கு 41 நிறுவனங்கள்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 03 அமைச்சுக்கள் தொடர்பான விடயங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொண்ணூற்று நான்கு...