follow the truth

follow the truth

December, 26, 2024
Homeவணிகம்பிரித்தானிய இளவரசி ஆன், இலங்கைக்கான அரச விஜயத்தில் முதலாவதாக MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விஜயம்

பிரித்தானிய இளவரசி ஆன், இலங்கைக்கான அரச விஜயத்தில் முதலாவதாக MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விஜயம்

Published on

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானியாவின் இளவரசி Anne உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது,​இளவரசி Anne, அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமதி லோரன்ஸ் மற்றும் அரச தூதுக்குழு மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேதகு அன்ட்ரூ பேட்ரிக் ஆகியோர், கட்டுநாயக்கவில் உள்ள MAS ACTIVE தயாரிப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு மையம் MAS Nirmaanaவிற்கு விஜயம் செய்தனர். அங்கு அவருக்கு மிகுந்த வரவேற்பு வழங்கப்பட்டது. MAS Holdings இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளர் மற்றும் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வேலை வழங்கும் நிறுவனமாகும்.

MAS Nirmaanaவில் அவர்கள் நிறுவனத்தின் ஆடை நிபுணத்துவம் மற்றும் கண்டுபிடிப்பு திறன்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றனர். MAS Holdings குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ மற்றும் MAS Active இன் பிரதம நிறைவேற்று அதிகாரி முடித பெர்டினாண்டோ ஆகியோர் இந்த கண்காணிப்புச் சுற்றுப்பயணத்திற்கு இராஜரீகமான பிரதிநிதிகளுடன் ஒன்றிணைதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய சிந்தனைகளை ஆராய்வது முதல் டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்குவது வரை அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் திறன்களைக் கொண்ட உலகளாவிய ஆடை உற்பத்தி மையமான Nirmaanaவிற்கு பிரித்தானிய இளவரசி மற்றும் சேர் திமதி லோரன்ஸ் ஆகியோர் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். MAS Nirmaana உலகளாவிய ஆடைத் துறையில் முன்னணியில் உள்ளது, இது முன்னோடி படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளின் முன்னணி மையமாக உள்ளது. MAS Holdings குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

“பிரித்தானிய இளவரசி மற்றும் சேர் திமதி லோரன்ஸ் எங்கள் நிறுவனங்களில் ஒன்றிற்கு வருகை தந்ததில் நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். எங்கள் 36 வருட ஆடைத் தொழிலில், எங்களின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக இங்கிலாந்து முக்கியப் பங்காற்றியுள்ளது. இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில், இவ்விரு நாடுகளுக்கிடையிலான நட்பு MAS க்கு சமமான முக்கியமான சந்தர்ப்பமாகும்.” என தெரிவித்தார்.

MAS Holdings தொடர்பில்
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS குழுமம், ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பாளர்-விநியோகஸ்தர் ஆகும். இங்கு 100,000 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். இன்று, MAS தனது தயாரிப்புகளை 15 நாடுகளில் முன்னணி நவநாகரீக இடங்களில் அமைந்துள்ள உற்பத்தி வசதிகளுடன் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. MAS இன் தயாரிப்பு வரம்பில் Intimate wear, விளையாட்டு, பயிற்சி மற்றும் செயல்திறன் ஆடைகள், நீச்சலுடைகள், Shape ஆடைகள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கான ஆடைகள் ஆகியவை அடங்கும். MAS பிராண்ட் ஆடை தொழில்நுட்பம், FemTech, Start-ups, மூலப்பொருள் விநியோகச் சங்கிலி மற்றும் ஆடை பூங்காக்கள் மூலம் உலகம் முழுவதும் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்ய வேகமாக விரிவடைந்துள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக, MAS ஆனது அதன் நெறிமுறை மற்றும் நிலையான பணிச்சூழலுக்காகவும், அதன் கைவினைத்திறன் மற்றும் தயாரிப்பு சிறப்பிற்காகவும், அத்துடன் பெண்கள் அதிகாரமளித்தலுக்காகவும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...