follow the truth

follow the truth

December, 26, 2024
Homeவணிகம்Asriel Holdings உடன் கைகோர்த்து இலங்கைக்கு வரும் Brooks Running பாதணிகள்

Asriel Holdings உடன் கைகோர்த்து இலங்கைக்கு வரும் Brooks Running பாதணிகள்

Published on

உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் தடகள பாதணி பிராண்டான Brooks Running, அதன் உள்ளூர் பங்காளியான Asriel Holdings (Pvt.) Ltd உடன் இணைந்து, அண்மையில் பிராண்டின் உத்தியோகபூர்வ அறிமுகப்படுத்தலை செய்தது.

Warren Buffet's Berkshire Hathaway Inc. இன் துணை நிறுவனமான Brooks Running என்பது செயல்திறன் மற்றும் புத்தாக்கத்துக்கு ஒத்ததாக வேகமாக வளர்ந்த ஒரு பிராண்ட் ஆகும். அமெரிக்காவில் 25% சந்தைப் பங்கையும், கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 100% ஆண்டு விற்பனை வளர்ச்சியையும் பெற்றுள்ளது,

Brooks Running விளையாட்டு வீரர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான பிராண்டாக உலகம் முழுவதும் பெருகிய முறையில் போற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ‘Brooks Running விளையாட்டு வீரர்களுக்கு சீரான சிறந்த ஓட்ட அனுபவத்தை வழங்குகிறது. பொறியியல், Biomechanics மற்றும் 3D Printing தொழில்நுட்பத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, விளையாட்டு வீரர்களின் விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் செயல்படும் விளையாட்டு வீரர்களுக்கு நிகரற்ற சௌகரியம், செயல்திறன் மற்றும் நீடித்துழைப்பு ஆகியவற்றை வழங்கும் தடகள பாதணிகளை உருவாக்குவதற்கான எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

‘இந்த சந்தையில் அபரிமிதமான வளர்ச்சி திறனை நாங்கள் காண்கிறோம், மேலும் சந்தையில் மிகச் சிறந்த பாதணிகளுடன் இலங்கையின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கலாச்சாரத்தை ஆதரிப்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பையும் நாங்கள் காண்கிறோம்’என Brooks Runningஇன் Country Manager Kartik Shah கூறினார்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளரான சாமிக்கா கருணாரத்ன Brooks Running Sri Lankaவின் வர்த்தக நாம தூதராக உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிராண்டை முதன்முதலில் கண்டதில் இருந்தே அவர் உடனடியாகவும் ஆர்வமுள்ள ரசிகரும் ஆவார்.

‘நான் முதலில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, நான் ஏற்கனவே பழகிய ஒரு பிராண்ட் இருந்ததால், எனது பாதணிகளைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஆனால் சர்வதேச அளவில் சக கிரிக்கெட் வீரர்களிடமிருந்து எனக்கு மீண்டும் மீண்டும் கிடைத்த பின்னூட்டங்களின் அடிப்படையில், Brooks Runningஐ பயன்படுத்த முயற்சிக்க முடிவு செய்தேன், நான் அதனை பயன்படுத்த ஒருபோதும் பின்வாங்கவில்லை. Brooks எனது பயிற்சி மற்றும் செயல்திறனில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, அதனால்தான் 1யுளசநைட ர்ழடனபௌக்கு ஆதரவளிப்பதில் பெருமையடைகிறேன், மேலும் நமது நாடு முழுவதிலும் உள்ள இலங்கை விளையாட்டு வீரர்களுடன் இணைவதற்கும் அவர்களை உயர்த்துவதற்கும் நான் பெருமைப்படுகிறேன்’ என அவர் கூறினார்.

Brooks Running பாதணிகள் தடகள ஈடுபாட்டில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டறிந்துள்ளது, குறிப்பாக COVID-க்குப் பின், தனிநபர்கள் உடல்நலம் மற்றும் உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த பிராண்ட் இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் ஏறக்குறைய 100% வளர்ச்சியைக் கண்டுள்ளது, இது இலங்கை, நேபாளம், மாலைதீவுகள் மற்றும் ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள பிற முக்கிய பொருளாதாரங்களில் இதேபோன்ற வளர்ச்சிக்கான வலுவான திறனைக் குறிக்கிறது.

Asriel Holdings, Brooks Running Shoesக்கான ஊக்கமாக செயல்படும், பிரீமியம் வர்த்தக நாம விநியோகத்தில் அதன் பரந்த அனுபவத்தை பயன்படுத்தி இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு விருப்பமான தேர்வாக Brooks ஐ நிலைநிறுத்துகிறது. Brooks Runningற்கான முழு அளவிலான செயல்பாடுகள் மார்ச் 2024க்கு முன் ஆரம்பமாகும்.

“இலங்கையில் Brooks Runningன் பங்குதாரராகவும் முகவராகவும் பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Asriel Holdings இன் வெற்றியானது, நாங்கள் ஈடுபடும் பிராண்டுகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வரும்போது தரத்தில் வரையறையற்ற அணுகுமுறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. Brooks உடனான எங்கள் கூட்டாண்மையானது எங்கள் பணிக்கு ஒரு சான்றாகும் – நம்பிக்கை மற்றும் சிறப்பை ஊக்குவிக்கும் பிராண்டுகளுடன் வாடிக்கையாளர் தேவைகளை எதிர்பார்க்கவும், அடையாளம் காணவும், திருப்திப்படுத்தவும் முடியும்.

HORECA (Hotel Restaurants & Cafes), Quick Service Restaurants (QSR), உள்நாட்டு சந்தைக்கான பேக்கரிகள் மற்றும் பால் தொழில்கள் ஆகியவற்றிற்கான இலங்கையின் முன்னணி மொத்த உணவுத் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக Asriel Holdings உள்ளது. நிறுவனம், இலங்கையில் அதிநவீன உற்பத்தி வசதிகளில் பதப்படுத்தப்பட்ட சிறந்த மூலப்பொருள்களைக் கொண்ட பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்குகிறது. Brooks Running உடனான கம்பனியின் கூட்டாண்மையானது, Asriel தனது வலுவான
சில்லறை திறன்களை உள்ளூர் தடகள சந்தைக்கு ஆதரவளிப்பதற்கு உதவும், இலங்கை விளையாட்டு வீரர்கள் உலகின் மிகச்சிறந்த Running Shoesகளை அணுகுவதை உறுதிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு Asriel Holdings Pvt Ltdஇன் 0094 112577230 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது info@asrielmarketing.com ஊடாக தொடர்புகொள்ளவும்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...