தேசிய மக்கள் சக்தியின் ஆயிரக்கணக்கான முத்துக்கள் சேர்ந்து வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் கலி பவுசர்களில் (மலசல கழிவுகளை அகற்றக்கூடிய பவுசர்) குப்பை கழிவுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறார் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வரி விதித்து மக்களை கொன்று குவிக்கும் ஆட்சியாளர்கள் தேர்தல் நெருங்கும் போது மின் கட்டணத்தை குறைக்க தயாராகி வருகின்றனர் என்றார்.
அதன்பிறகு தகரம், உணவு, மதுபானங்கள் என வழங்கி மக்களையும் ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்த கதை எல்லாம் கடந்த காலத்தைச் சேர்ந்தது எனவும் எதிர்காலத்திற்குரியதாக இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.