கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (டிசம்பர் 22) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை (Buying Rate) 305.63 ரூபாயிலிருந்து 305.72 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை (Selling Rate) 313.24 ரூபாயிலிருந்து 313.33 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும், ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், வளைகுடா நாடுகளின் (Gulf currencies) நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி இன்று உயர்வடைந்துள்ளது.
