அடுத்த வருடம் தபால் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல மூலப்பொருட்களின் விலையேற்றமே இதற்கு காரணம் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தபால் கட்டணங்களை திருத்துவதற்கு VAT அதிகரிப்பு பொருந்தாது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.