ஜனவரி 1ஆம் திகதி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான VAT அமுலாக்கத்தில் இருந்து துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் திருமதி தனுஜா பெரேரா இன்று தெரிவித்தார்.
எரிபொருளுக்கான 18 சதவீத வாட் வரியை அமுல்படுத்தும் போது, அந்த வரியில் இருந்து 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என்று கூறிய அவர், சமையல் எரிவாயுக்கான 18 சதவீத வாட் வரியை அமுல்படுத்தும்போது, தற்போதுள்ள 2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என்றார்.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மீதான வாட் வரி விதிக்கப்பட்ட பின்னரும் 18 வீதம் விலை அதிகரிக்காது என தெரிவித்த அவர், பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்வதால் விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.