தனியார் துறையினர் இறக்குமதி செய்த 15 கொள்கலன் மருந்துகள் தற்போது துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
குறித்த மருந்து நிறுவனங்களின் பதிவு உள்ளிட்ட பல சிக்கல்களினால் இவற்றை விடுவிக்க முடியாதுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இந்த சிக்கல் நிலை தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிபிட்டுள்ளார்.