follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுகாணொளி ஊடாக கைதிகளுக்கு உறவினர்களுடன் உரையாட வாய்ப்பு

காணொளி ஊடாக கைதிகளுக்கு உறவினர்களுடன் உரையாட வாய்ப்பு

Published on

காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக சிறைக்கைதிகளுக்கு அவர்களின் உறவினர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள E visit என்ற இந்த முறைமையின் ஊடாக காணொளியூடாக இரு தரப்பினரும் உரையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை திணைக்களத்தின் மின்னஞ்சல் முகவரியூடாக முன்பதிவுசெய்து, சிறைச்சாலை அதிகாரியொருவரின் முன் உரையாட முடியும் என தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கு எவ்வித கட்டணமும் இன்றி, சிறைச்சாலை சட்ட திட்டங்களுக்கமைய முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு வாராந்தமும் , தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு மாதாந்தமும் இவ்வாறு காணொளி மூலம் உறவினர்களுடன் உரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

இதன் ஆரம்ப கட்டமாக இவ்வாரம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் காணொளியூடாக உரையாட வாய்ப்பளிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...