இணையதளம் மூலம் ஆசன முன்பதிவு செய்யும் சேவை மிகவும் வெற்றியடைந்துள்ளதாகவும் மாதாந்தம் எழுபத்தி ஏழாயிரம் பேர் சேவையைப் பெறுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
இச்சேவை மூலம் ஒரு வருடத்தில் மூன்றரை கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச் மாதம் நாடளாவிய ரீதியில் 5,300 பஸ்கள் இயக்கப்படவுள்ளதுடன், புதிதாக 800 நடத்துனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.