இந்தியத் திரைப்படமொன்றில் பெளத்த துறவி வேடத்தில் நடிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கதாப்பாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள டயானா கமகே நேற்று(21) தலையை மொட்டையடிக்க தயாராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை இந்திய நட்புறவுக்காக இந்திய மூத்த திரைப்பட இயக்குனரால் உருவாக்கப்பட்ட பௌத்த கருப்பொருளைக் கொண்ட ஒரு உன்னதமான திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரமான பெளத்த துறவியாக டயானா கமகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டயானா கமகே குறித்த படத்தில் நடிக்க இந்திய திரைப்பட இயக்குனரின் அழைப்பை மிகவும் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.