எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதை அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அது அந்நாட்டு அரசியலமைப்பின் 14வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம்.
உரிய முடிவின்படி, ஜனாதிபதி தேர்தலில் கொலராடோ மாகாணத்தில் போட்டியிடும் வாய்ப்பை டொனால்ட் டிரம்ப் இழப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த தீர்மானத்தினை எதிர்த்து டொனால்ட் டிரம்ப் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.