அடுத்த ஆண்டு மே மாதம் வரை சுமார் 35 சொகுசு பயணிகள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
பழைய பயணிகள் முனையத்திலும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை பராமரிக்கவும், அபிவிருத்தி பணிகள் முடியும் வரை மற்ற வசதிகளை வழங்கவும் துறைமுக அதிகாரசபை உடனடி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.