follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP1எமது அழகினை உலகிற்கே படம் பிடித்துக் காட்டிய Nas Daily

எமது அழகினை உலகிற்கே படம் பிடித்துக் காட்டிய Nas Daily [VIDEO]

Published on

இலட்சக்கணக்கான ரசிகர்களால் பிரபலமாகியிருக்கும் நாஸ் டெய்லி (Nas Daily) என்ற Vlog படைப்பாளி, இலங்கையின் அழகை வெளிப்படுத்தும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அவர் முன்பு உருவாக்கிய ஆயிரக்கணக்கான வீடியோக்களின் தொகுப்பின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்…

அவற்றுள் This is Made of Poop, My Biggest Money Mistake, The Key Board Warrior என இலங்கையைப் பற்றிய மூன்று வீடியோக்களும் சமூக வலைதளத்தில் உள்வாங்கப்பட்டிருந்தன.

மேலும், 2020 ஆம் ஆண்டில், Nas Daily, கொவிட் தொற்றுநோய் காலத்தில் இலங்கையை மிகவும் தாராளமான நாடாகப் பெயரிட்டு வெளியிடப்பட்ட வீடியோவும் பலரின் அன்பை வெல்ல முடிந்தது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரபல சர்வதேச Vloger ‘Nas Daily’ இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தனது முதல் காணொளியை இன்று சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவர், அழகிய கலாசாரம் மற்றும் அழகான மனிதர்களை கொண்ட உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான நாடுகளில் இலங்கையும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் Nas Daily மூன்று விசேட காணொளிகளை வெளியிடவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் – அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்

அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரை...

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ரூ.1 பில்லியன் இழப்பீடு கோருகிறார் மனுஷ

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட...

ஜனாதிபதி அநுரவின் கீழ் 94 நிறுவனங்கள் உள்ளன – ஹரிணிக்கு 26, நலிந்தவுக்கு 41 நிறுவனங்கள்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 03 அமைச்சுக்கள் தொடர்பான விடயங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொண்ணூற்று நான்கு...