அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களின் விலை குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளரும் அதன் சக்தி சபையின் தலைவருமான கலாநிதி லக்மால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல்களுக்கு 18% VAT விதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.