குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று (14) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
குருநாகல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த புவனேகபா ராஜ சபை மண்டபத்துடன் கூடிய கட்டிடத்தை இடித்து அகற்றியமை தொடர்பில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.