அதிபர் – ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் அரசாங்கம் தீர்மானத்தை அறிவித்துள்ள போதிலும், தொழிற்சங்க போராட்டத்தை நிறைவுக் கொண்டு வரும் தீர்மானத்தை நாம் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
நிதியமைச்சரின் உறுதிமொழி வரவு – செலவு திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் குறித்து கூட்டாக அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வரும் வகையில் அரசாங்கம் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக மூன்றில் ஒரு பகுதி சம்பளத்தை ஒரே தடவையில் அதிகரிப்பதாக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார்.
நிதியமைச்சரின் வாக்குறுதியை தொடர்ந்து தற்போதைய சட்டப்படி கடமையில் ஈடுப்படல், பிற்பகல் 2 மணிக்கு பிறகு போராட்டத்தில் ஈடுப்படல் ஆகிய தொழிற்சங்க போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்