மூன்று மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட நுகர்வுக்கு தகுதியற்ற
பெரிய வெங்காய கொள்கலன்கள் மூன்று சீதுவ, லியனகேமுல்லவில் அமைந்துள்ள பொருட்களின் கிடங்கில் சீல் வைக்கப்பட்டது.
கட்டுநாயக்க சீதுவ மாநகர சபையின் பிரதம பொது சுகாதார பரிசோதகர் எச்.பி.பி மணில் சோமேதிலக அவர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகர் குழுவினர் இன்று (13) சுமார் 20,000 கிலோ பெரிய வெங்காயம் அடங்கிய மூன்று கொள்கலன்களுக்கு சீல் வைத்துள்ளனர்.
மூன்று வெங்காய கொள்கலன்களுக்கு பொறுப்பான அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.