சிலாபம் – அம்பகதவில பாடசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் தரம் 11 இல் கல்வி கற்கும் இரண்டு மாணவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று (12) காலை மாணவர்கள் இருவரும் பாடசாலையின் நுழைவாயிலில் ஏறி விளையாடிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவர் ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் மற்றைய மாணவர், சிலாபம் பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.