பெட்ரோல் மற்றும் டீசலுக்கு VAT அல்லது பெறுமதி சேர் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, கச்சா எண்ணெய் வடிவில் கொண்டு வரப்படும் எரிபொருளுக்கு இந்த வரி அறவிடப்படாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.