நோபல் பரிசு வென்ற மலாலா யூசுஃப்சாய் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
மலாலா யூசுஃப்சாய் மற்றும் ஆசிர் மாலிக் ஆகியோரின் திருமண வைபவம் இஸ்லாமிய முறைப்படி இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுள்ளது.
இது தனது வாழ்வின் மகிழ்ச்சிகரமான தருணம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மலாலா யூசுஃப்சாய் பெண்கள் உரிமைக்கான குரலாகவும் திகழ்கின்றார்.