ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் யாரும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“.. மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருக்கின்றனர். இவர்கள் மூவரைத் தவிர பொஹட்டுவையில் தலைவர்கள் இல்லை. அவர்கள் அல்லாது தலைவர்கள் என பேசப்படும் யாராவது இருக்கிறார்களா? அவ்வாறு தலைவர்களை உருவாக விடுவதுமில்லை. எனது அறிவுக்கு எட்டிய அரசியலின்படி பொஹட்டுவையில் உள்ள உறுப்பினர்களை ஒருபோதும் அவர்கள் தலைமைக்கு ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக ரணில் விக்கிரமசிங்க அவர்களது தலைவராக இருக்க ராஜபக்ஷர்கள் விருப்பம். அதனால் தான் ஜனாதிபதி கதிரை என்று வரும் போது, வருடக்கணக்கில் கட்சியுடன் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு பாடுபட்ட உறுப்பினர்கள் இருக்கத்தக்க பாராளுமன்றில் ஒரு உறுப்பினர் பதவியைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தார்கள். ராஜபக்ஷர்களுக்கு தன்னுடன் இருப்பவர்களை நம்பிக்கையில்லை. அதைவிட வெளியே உள்ள ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கையாளர்..”
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்திற்கு வரும் நேரம் தொடர்பிலும் தீவிர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
“.. புதிய எதிர்க்கட்சித்தலைவர் என்பது நடக்காது. பொஹட்டுவையில் உள்ள சிலர் வெளியே கதைப்பதை அல்ல பாராளுமன்றில் கதைப்பது.. நாமல் ராஜபக்ஷ அவர்கள் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் வெளியே எந்தளவுக்கு சலிக்கிறார்? அவர் பாராளுமன்றுக்கு வந்து வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் எதிராக வாக்களிப்பர் என்று நீங்கள் நினைகிறீர்களா? அரசியல் நிலைப்பாட்டின்படி அவர்கள் வங்குரோத்து நிலையில் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. ராஜபக்ஷர்களுக்கு இருக்கும் நோக்கமானது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கும் நோக்கமானது நாமல் ராஜபக்ஷவை அந்த இடத்திற்கு கொண்டு வரும் வரைக்கும் அதனை பாதுகாப்பு யாரென்பது தான்.. பொஹட்டுவ இரண்டு மூன்றாக உடைந்துள்ளது…”