நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்று (30) தெரிவித்தார்.
“நீதிமன்றம் என்பது பயத்துடனும் சந்தேகத்துடனும் செல்லும் இடமல்ல. நீதிமன்றத்தின் முன் சாட்சியமளிக்கும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல.
சாட்சிகள் நீதித்துறை செயல்பாட்டில் உதவும் குடிமக்கள். எனவே கூண்டில் இருந்து சாட்சியமளிக்கும் ‘கூண்டு முறை’ மாற்றப்பட்டு, கண்ணியமான முறையில் சாட்சியம் அளிக்கும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும்..” என நீதியமைச்சர் தெரிவித்தார்.
நீதி அமைச்சில் நீதிமன்ற முறைமைக்கு அட்டை கொடுப்பனவு முறையை (Pos machin) அறிமுகப்படுத்துவதற்கான உடன்படிக்கையை மக்கள் வங்கியுடன் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு நீதியமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.