தற்போதைய உள்நாட்டு இறைவரிச் சட்டத்துக்கு அமைய 2022/2023 மதிப்பீடு ஆண்டுக்கான, அதாவது 2022 ஏப்ரல் 01 முதல் 2023 மார்ச் 31 வரையான காலகட்டத்துக்கான வருடாந்த வருமான அறிக்கையை நவம்பர் மதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கையளிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்வாறு கையளிக்காத வரி கோவைகளைப் பேணுபவர்களுக்கு 50,000 ரூபாய் தண்டப்பணம் மற்றும் செலுத்தவேண்டிய வரியில் 5 வீதம் தண்டப்படம் விதிக்கப்படும் என மேலும் சுட்டிக்காட்டினர்.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, வருடாந்த வருமான அறிக்கையை பூர்த்தி செய்தல் மற்றும் ஒன்லைன் (Online) முறையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு சமர்ப்பித்தல் தொடர்பான செயலமர்வு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வளவாளர்களின் பங்களிப்பில் நேற்று (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.