சப்புகஸ்கந்த மாபிம வீதியில் குப்பைத்தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாளிகாவத்தையைச் சேர்ந்த 44 வயதான பாத்திமா மும்தாஜின் படுகொலைத் தொடர்பில், பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கணவன்-மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கமைய பிரதான சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து படுகொலைச் செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள், வைத்திருந்த பணம், படுகொலைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உலக்கை, சடலத்தை எடுத்துச் சென்ற ஓட்டோ உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன என சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்