இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜே.ஷா இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையத்தளத்தின் யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரே இந்த நாட்டில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க சமீபத்தில் குற்றம்சாட்டினார்.
இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தக் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறும் ஜனாதிபதி விக்கிரமசிங்க, இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளரிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசியதாகக் கூறினார்.
“இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு ஜே.ஷா உதவுகிறார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நான் ஷாவிடம் பேசி, இந்த பிரச்சினையில் அவரது பெயர் இணைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தேன்…”
ஐசிசி தடை குறித்து கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்படலாம் என்பதை புரிந்து கொண்டதாக தெரிவித்தார்.