ஒப்பந்தத்தில் உள்ள ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினருக்கு கோரிக்கை கடிதம் அனுப்புவது சாதாரணமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
உர விவகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனம் நட்டஈடு கோரியமை தொடர்பில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இது ஒரு வர்த்தகச் செயல், ஒரு தரப்பினர் மற்ற தரப்பினருக்கு கோரிக்கை கடிதம் அனுப்புவது இயல்பானது. இது தேசத்தின் இறையாண்மையை எந்த வகையிலும் பாதிக்காது” என்று காரியவசம் கூறினார்.
சீன உர நிறுவனம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தவறான விளக்கமளிக்க வேண்டாம் எனவும் அவர் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.