follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP1ரோபோவால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம்

ரோபோவால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம்

Published on

தென் கொரியாவில் ரோபோ தாக்கியதில் அந்நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உணவு அடங்கிய பல பெட்டிகளை சரியாக அடையாளம் காணத் தவறியதால் அந்த நபர் ரோபோவால் தாக்கப்பட்டார்.

40 வயதான அந்த நபர் ரோபோவை சோதனை செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த நபரை ரோபோ பிடித்து அவரது முகம் மற்றும் மார்பை நசுக்கியதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யொன்ஹெப் தெரிவித்துள்ளது.

காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் இறந்தார்.

ரோபோவின் பணி மிளகு பெட்டிகளை தூக்கி தட்டுகளுக்கு மாற்றுவதாகும்.

நவம்பர் 8 ஆம் திகதி, இறந்த தொழிலாளி தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள மிளகு வரிசைப்படுத்தும் ஆலையில் பயன்படுத்துவதற்காக ரோபோவை சோதித்துக்கொண்டிருந்தார்.

அதன்படி, சோதனை ஓட்டத்திற்கு முன், அந்த ஊழியர் ரோபோவின் சென்சார் செயல்பாடுகளை சரிபார்த்துக்கொண்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த வகையில், மார்ச் மாதம், 50 வயது தென் கொரிய நபர், கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் போது, ​​ரோபோ மோதியதில், பலத்த காயமடைந்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உர மானியத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வு

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்கப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்குத்...

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட...

மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல...