follow the truth

follow the truth

November, 20, 2024
HomeTOP1பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் 30% சலுகை விலையில் வழங்க நடவடிக்கை

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் 30% சலுகை விலையில் வழங்க நடவடிக்கை

Published on

அடுத்த வருடத்திற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பாடசாலைகளுக்கு சுற்று நிருபம் வெளியிடப்படும் என கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தினார்.

அடுத்த வருடத்திற்குள் பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மேல் டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கல்வி அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தர வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய நியமனங்களை வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு தொடர்பில் பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை பரிசீலித்த சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் இந்த தீர்மானத்தை வழங்கியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

காமினி சுபசிங்க, எம்.ஐ.எம்.மான்சி மற்றும் டபிள்யூ.எச்.ஆர்.பெர்னாண்டோ ஆகியோரால் இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு நியமிக்கப்படுவதற்கு தகுதியுடையவர்கள் எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளாக கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை அதிபர் சேவையில் 4718 வெற்றிடங்களை நிரப்புவதற்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை நியமிக்குமாறு கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி உயர் நீதிமன்றம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும்

அடுத்த மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக...

மாற்றம் இல்லை – திட்டமிட்டபடி உயர்தர பரீட்சை நடைபெறும்

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும்...

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம்...