வடமேற்கு நேபாளத்தின் பல மாவட்டங்களை பாதித்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
நிலநடுக்கத்துடன் ஏற்பட்ட விபத்துக்களில் இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டு வருவதாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு நேபாளத்தின் பல மாவட்டங்களில் நேற்று (03) இரவு ரிக்டர் அளவுகோலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.