லெபனான் எல்லையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர் இன்று (03) முதன்முறையாக இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம்.
வெளிநாட்டு ஊடகங்கள் அவரது அறிக்கையை பெய்ரூட்டில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்ததாகக் தெரிவித்திருந்தார்.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாஹ் கூறுகையில், 100% பலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் திகதி தாக்குதல் நடத்தினர்.
ஹமாஸ் தாக்குதலுக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஹிஸ்புல்லாஹ் போரில் இணைந்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரித்து வருகிறது.