இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட மனுவினை மேல்முறையீட்டு நீதிமன்றம் செலவுகளுடன் தள்ளுபடி செய்துள்ளது.
மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த மனு நிராகரிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தாம் பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதால், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் தெரிவு செய்ய, அமரவும், வாக்களிக்கவும் டயானா கமகேவுக்கு தகுதியில்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.