follow the truth

follow the truth

November, 20, 2024
HomeTOP1பெறுமதி சேர் வரி 18% அதிகரிப்பு

பெறுமதி சேர் வரி 18% அதிகரிப்பு

Published on

பெறுமதி சேர் வரி விகிதத்தை 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 51 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வரி வசூல் இலக்குகளை அடைய முடியவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம், வரி வருமானம் மற்றும் முதன்மை சமநிலை இலக்குகளை அடைவதற்காக VAT ஐ அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், 01.01.2024 முதல் பல புதிய வரி முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SJBயின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிப்பு

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட புதிய அமைச்சக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களை நாளைய தினத்திற்குள் கையளிக்குமாறு அறிவுறுத்தல்

நாளைய தினத்திற்குள்(20) உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 108 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும்...