follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுபயண பொதியிலிருந்து பெண்ணின் சடலம் - இருவர் கைது

பயண பொதியிலிருந்து பெண்ணின் சடலம் – இருவர் கைது

Published on

சப்புகஸ்கந்த பகுதியிலுள்ள குப்பை மேட்டிலிருந்து, பயணப் பொதியிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆணொருவரும் பெண்ணொருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தாயான 42 வயதான பாத்திமா முன்தாஸ், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்த குறித்த பெண், கொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவரால் தனது மனைவி காணாமற்போயுள்ளதாக கடந்த 28 ஆம் திகதி புளூமென்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மருந்துகளுக்கான விலைச் சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் 

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதி இன்றி விரைவான பொறிமுறையொன்றின்...

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்

தற்போது நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் நடந்து வருகின்றமையினால் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்கின்றனர்....

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை...