காஸா பகுதியில் நில ஆக்கிரமிப்புக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அந்நாட்டில் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காஸா பகுதியில் எரிபொருள் நிறுத்தப்பட்டதையடுத்து, வைத்தியசாலை அவசர சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 3 வாரங்களில் காஸா பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 6,500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களால் இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.