follow the truth

follow the truth

January, 15, 2025
HomeTOP1காஸா போரில் சீனா நடுநிலைமை வகிக்கிறதா?

காஸா போரில் சீனா நடுநிலைமை வகிக்கிறதா?

Published on

ஹமாஸ் அமைப்பிடமிருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று சீனா கூறுகிறது.

அங்கு, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.

ஒரு சுற்று உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைக்காக தனது வெளியுறவு அமைச்சர் வாங் யீ அமெரிக்கா செல்ல தயாராகி வரும் பின்னணியில் சீனா இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து உருவான இராணுவ சூழ்நிலைக்கு சீனா பதில் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மோதலை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனா அங்கு கூறியிருந்தது. ஆனால், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு குறித்து சீனா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டது.

இதனிடையே, இஸ்ரேல் குறித்து சீனாவின் திடீர் கருத்துக்களால் சர்வதேச வர்ணனையாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

காரணம், சீனா ஈரானின் நட்பு நாடு. இஸ்ரேலுக்கு எதிரான காசா போரின் போது ஈரான் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இரு இயக்கங்களையும் ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்துச் செய்யும் மனு – 31ம் திகதி விசாரணைக்கு

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி...

இந்த ஆண்டு மதுபானசாலைகள் 18 நாட்களுக்கு மூடப்படும்

2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு...

அமெரிக்கா காட்டுத்தீ – ஜப்பான் 2 மில்லியன் டொலர் நிதி உதவி

அமெரிக்கா - லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பரவி வரும் இரண்டு பெரிய காட்டுத்தீயும் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் குறைந்தபட்சம்...