பிரேசில் பாடகி மரிலியா மென்டோன்கா விமான விபத்தில் காலமானார். 26 வயதான பிரேசில் பாடகி அவர் பயணம் செய்த சிறிய விமானம் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
மேலும் 4 பேர் இந்த அசம்பாவித சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் மெண்டன்கா இசை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மென்டோன்காவின் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கால்பந்து நட்சத்திரம் நெய்மர் உள்ளிட்ட முக்கிய பிரேசிலியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்