follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுவரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக 102 கலந்துரையாடல்களை நடாத்திய பசில்!

வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக 102 கலந்துரையாடல்களை நடாத்திய பசில்!

Published on

22 ஆவது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக பல்வேறு தரப்பினருடன் 102 கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

அமைச்சரவை மற்றும் அரச அமைச்சுக்கள் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் அதிகார சபைகளின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்கள், உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நடப்பு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளில் மக்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 76 ஆவது வரவு செலவுத் திட்டம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் ஆகும்.

வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கான விலை சூத்திரத்திற்கு ஏற்ப விலை சூத்திரம் அதிகரிக்கப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் கலாநிதி சமதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கொவிட் 19 தொற்று காரணமாக அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய சிரமங்கள் இருந்தபோதிலும் அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என்று நிதியமைச்சர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்தின் வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பெரும் தொகையை வரிகள் மூலம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வருட வரவுசெலவுத் திட்டமும் சம்பள அதிகரிப்பு அல்லது மானியங்களை கட்டுப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவ்வருட வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு நிவாரணம் வழங்காது மக்களிடம் இருந்து எடுக்கப்பட வேண்டும் என அண்மையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மேலும் பலரை கைது செய்ய CID விசாரணை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...