follow the truth

follow the truth

February, 12, 2025
HomeTOP1தற்போது வேகமாக பரவும் தொற்று நோய்கள்

தற்போது வேகமாக பரவும் தொற்று நோய்கள்

Published on

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில பகுதிகளில் கண் நோய், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் போன்றவை பதிவாகி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் தமது சுகாதாரப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன,

“.. இம்மூன்று நோய்களையும் கட்டுப்படுத்த தனிமனித சுத்தம் மிகவும் அவசியமானது.மேலும், தற்போதைய வெள்ள நிலைமை தணிந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் பாரியளவிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த அனர்த்தத்தை தடுக்க பொதுமக்களின் பூரண ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்றேல், எதிர்காலத்தில் ஏராளமான உயிர்கள் பறிபோகும் நிலைக்கு தள்ளப்படலாம்…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தனியான பிரிவு

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகள் முன்னெடுக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை...

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா? இன்று தீர்மானம்

நாளைய தினமும்(13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா என்பது குறித்து இன்று (12) பிற்பகல் தீர்மானிக்கப்படும் என்று இலங்கை மின்சார...