follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுதிறந்த பல்கலைக்கழகத்தின் முன் ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

திறந்த பல்கலைக்கழகத்தின் முன் ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Published on

எதிர்வரும் 9 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆசிரியர்-அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பல்கலைக்கழக பேராசிரியர் சேவை சங்கத்தினர் இன்று நாவல-திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சம்பள பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்னெத்த தொழிற்சங்க போராட்டம் தற்போது ஏனைய தொழிற்சங்கத்தினரது ஆதரவுடன் பலமடைந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் பாடசாலை கடமைக்கு சமுகமளித்துள்ளதுடன்,தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

சுபோதினி குழுவின் அறிக்கைக்கு அமைய ஆசிரியர்-அதிபர் சேவையில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். கட்டம் கட்டமான சம்பள அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரவு- செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டத்தை மேற்கொள்வோம் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...