follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுமட்டு பறவைகள் சரணாலயத்திற்குள் இராணுவ முகாம் வந்தது எப்படி? ஊடகவியலாளர்களுக்கும் இடையூறு (படங்கள்)

மட்டு பறவைகள் சரணாலயத்திற்குள் இராணுவ முகாம் வந்தது எப்படி? ஊடகவியலாளர்களுக்கும் இடையூறு (படங்கள்)

Published on

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் புதிதாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான தொழுநோய் வைத்தியசாலை மற்றும் முருகன் கோயில், கத்தோலிக்க தேவாலயம் உட்பட மதஸ்தளங்களும் காணப்படுகின்றன.

அத்தோடு இலங்கையில் வரலாற்று ரீதியாக குறித்த பிரதேசம் பறவைகள் சரணாலயமாக உள்ளது.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாந்தீவு பிரதேசத்திற்குள் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கு நின்ற இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதோடு பாதுகாப்பு அமைச்சில் அனுமதி எடுத்து வருமாறு கோரியுள்ளனர்.

இதுவரை காலமும் சுகாதார அமைச்சுக்கு சொந்தமாக இருந்து வந்த மாந்தீவு பிரதேசம் எப்போது பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டது என்ற விடயம் யாருக்கும் தெரியாத நிலையில் அங்கு விமானப்படைக்கு சொந்தமான இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டபோது, குறித்த பிரதேசத்தில் விமானப்படைக்கு சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்று தற்காலிகமாக இயங்கி வருவதாகவும் நிரந்தர இராணுவ முகாம் ஒன்றுக்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதற்கான எந்த உத்தியோக பூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதார அமைச்சுக்கு சொந்தமான குறித்த பிரதேசத்தில் விமாப்படை முகாம் அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அதனை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது குறித்த இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மேலும் பலரை கைது செய்ய CID விசாரணை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நாளை(25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த விசேட...