மலையக ரயில் பாதையில் தொடர்ச்சியாக ரயில் தடங்கள் புரள்வதால் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு தடவைகள் ரயில்கள் தடம் புரண்டுள்ளதாகவும் மலையக ரயில் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மலையகப் புகையிரத பாதையில் செல்லும் ரயில்கள் தடம் புரண்டால் மிகவும் சிரமப்பட்டு பஸ்களை பிடிப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும், சாமான்கள் மற்றும் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்லும் போது கடும் சிரமங்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மலையக ரயில்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிப்பதாகவும், அடிக்கடி தடம் புரளும் இந்த ரயில் தடம் புரண்டதால் அந்த வெளிநாட்டவர்களும் அசௌகரியம் மற்றும் மிகுந்த கவலைக்கு ஆளாவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையக ரயில் பாதையில் தொடர்ந்து ரயில்கள் தடம் புரள்வதால் பயணிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ரயிலில் பயணம் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
மலையக ரயில் பாதையில் கடந்த (17ஆம் திகதி) தியத்தலாவை மற்றும் பண்டாரவளை நிலையங்களுக்கு இடையில் மற்றும் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ நிலையங்களுக்கு இடையில் கடந்த (16ஆம் திகதி) ரயில் தடம் புரண்டதுடன், 36 மணித்தியாலங்களுக்குள் இரண்டு தடவைகள் தடம் புரண்டுள்ளதாக புகையிரத பயணிகள் குறிப்பிடுகின்றனர்.
மலையக ரயில் பாதையை உரிய முறையில் பராமரித்து ரயில் தடம் புரளும் சாத்தியக்கூறுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே பயணிகள் மேலும் கோரிக்கை விடுக்கின்றனர்.